விசுவின் இன்னொரு புதிய முயற்சி ‘VISUMA TV’

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்த விசுவின் ‘VISUMA TV’

செய்திகள் 12-Oct-2016 12:40 PM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தந்த நடிகரும், இயக்குனருமான விசு ‘VISUMA TV’ என்ற பெயரில் வெப் டிவி ஒன்றை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா நேற்று காலை சென்னையிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. ‘VISUMA TV’யை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண்டன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், டி.பி.கஜேந்திரன், நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு விசுவையும் அவரது குழுவினரையும் வாழ்த்தி பேசினர்! இந்த நிகழ்ச்சியில் விசு இயக்கிய 18 நிமிடம் ஓடக்கூடிய ‘உன்னை நீ அறிந்தால்’ என்ற குறும்படமும் திரையிடப்பட்டது. வாழ்க்கையில் முன்னேற நாம் விவேகானந்தரின் கொள்கைகளை கடை பிடித்தால போதும் என்ற கருத்தை தாங்கி வந்த இந்த குறும் படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த்து என்பதற்கு அவர்கள் அளித்த கைத்தட்டல்கள் வெளிப்படுத்தியது.

#VisumaWebTV #Visu #SPMuthuraman #PonRadhakrishnan #VisumaWebTvLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மணல்கயிறு 2 - டிரைலர்


;