‘4G’யில் இணையும் ஜி.வி.பிரகாஷ்!

சி.வி.குமார் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘4G’

செய்திகள் 12-Oct-2016 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனர் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். ‘4G’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் பக்கர் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷே இசை அமைத்து கதாநாயகனாகவும் நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை பாலாஜி ஏற்றிருக்க, படதொகுப்பை லியோ ஜான் பால் ஏற்றிருக்கிறார். இப்படத்தில் ஜி.வி.யுடன் சதீஷ், சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்பதை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழுவினர் இப்படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வை தற்போது நடத்தி வருகிறார்கள். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. இப்போது ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘புரூஸ்லீ’ முதலான படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், ‘4G’யின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறாராம்!

#GVPrakashKumar #ThirukumaranEntertainment #CVKumar #4G #Balaji #BruceLee #KadavulIrukkanKumaru

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;