ரோஷன் ஆட்ரூஸ் இயக்கத்தில் ‘36 வயதினிலே’ படம் மூலம் தமிழ சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனார் ஜோதிகா! சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்த இப்படம் இந்நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் ஜோதிகாவுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்திற்கு கமல்ஹாசன் தயாரித்து, கெஸ்ட் ரோலில் நடித்த ‘மகளிர் மட்டும்’ படத்தின் டைட்டிலை மீண்டும் சூட்டியுள்ளார்கள். ‘மகளிர் மட்டும்’ என்ற டைட்டிலுடன் கூடிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை வெளியிட்டார்கள். ’36 வயதினிலே’ படத்தில் பெரும்பாலும் புடவையில் தோன்றி நடித்த ஜோதிகா, இப்படத்தில் மாடர்ன் கேரக்டரில் நடிப்பது மாதிரி அமைந்திருக்கிறது அவரது கெட்-அப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும்! பிரம்மா இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
#Jyothika #36Vayadhinile #BrammaG #KuttramKadithal #RoshanAndrews #Suriya #2DEntertainment #Ghibran #Manikandan
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...