விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி!

சுந்தர.சி.யுடன் இணைந்து மீசையை முறுக்கும்  ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி!

செய்திகள் 10-Oct-2016 11:02 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சுந்தர்.சி. அடுத்து ‘சங்கமித்ரா’ என்ற பெயரில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதோடு, ‘மீசையை முறுக்கு’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார். சுந்தர்.சி.யின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். அத்துடன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களையும் ஆதியே ஏற்றுள்ளார். இப்படத்தில் ஆதியுடன் கதாநாயகியாக ‘மனம் கொத்தி பறவை’யில் நடித்த ஆத்மியா நடிக்கிறார். விவேக் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ஆயுதபூஜையை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ள படக்குழுவினர் இப்படத்தை விரைவில திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இசை அமைப்பாளர்களான விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வரிசையில் இப்போது ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியும் ஹீரோவாக களம் இறங்குகிறார். ‘ஆம்பள’, ‘கதகளி’, ‘தனி ஒருவன்’ முதலான படங்களுக்கு இசை அமைத்த ஆதியின் இசையில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் விஷாலின் ‘கத்திச் சண்டை’.

#HipHopThamizha #MeesaiyaMurukku #SundarC #AvniMovies #ManamKothiParavai #Aathmika #Vivek

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;