ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

அமீர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

செய்திகள் 10-Oct-2016 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘தர்மதுரை’, ‘குற்றமே தண்டனை’ படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘பறந்து செல்லவா’, ’கட்டப்பாவை காணோம்’ ‘முப்பரிமாணம்’ முதலான படங்கள் வெளியாகவிருக்கிறது. தற்போது ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ மலையாள படமான ’ஜோமோன்டெ சுவிசேஷங்கள்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து அமீர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆமீர் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு கதாநாயகியாக ‘பிச்சைக்காரன்’ பட புகழ் சாத்னா டைட்டஸ் நடிக்க, இன்னொரு ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார் என்றும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#AishwaryaRajesh #Arya #Dharmadurai #Ameer #SantaTitus #KuttrameThandanai #ParanthuSellaVa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;