அதர்வாவுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் இயக்குனர்!

அதர்வா, நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் இயக்குனர்

செய்திகள் 10-Oct-2016 10:03 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யரும், ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கியவருமான அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கும் படம் ’இமைக்கா நொடிகள்’. கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்திற்கான வில்லன் நடிகருக்கான தேர்வு நடந்து வந்தது. இப்போது வில்லன் நடிகர் யார் என்பது முடிவாகிவிட்டது. பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வரும் அனுராக் காஷ்யாப் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா முதலானோருடன் வில்லனாக மோதவிருக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யாப் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ‘அகிரா’ படத்தில் கருணையற்ற ஒரு போலீஸ் அதிகாரியாக வில்லனை போன்ற ஒரு வேடத்தில் நடித்திருந்தார். தமிழில் அனுராக் காஷ்யாப் வில்லனாக அறிமுகமாகும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

#Atharva #ImaikkaNodigal #AjayGnanamuthu #DemonteColony #CameoFilms #AnuragKashyap #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;