அரஜுன் படத்திற்கு நடனம் அமைக்கும் ஹாலிவுட் இரட்டையர்கள்!

ஐஸ்வர்யா அர்ஜுனை நடனம் ஆட வைத்த ஹாலிவுட் இரட்டையர்கள்!

செய்திகள் 8-Oct-2016 11:58 AM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீராம் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ சார்பில் அர்ஜுன் கதை எழுதி இயக்கி தயாரித்து வரும் படம் ‘காதலின் பொன் வீதியில்’. இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க, புதுமுகம் சந்தன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் ஆடும் இளமை துள்ளனான பாடலுக்கு ஹாலிவுட் மற்றும பாலிவுட் படங்களில் நடன இயக்குனர்களாக பணியாற்றிய இரட்டையர்களான பூனம் ஷா, பிரியங்கா ஷா ஆகியோர் நடனம் அமைத்துள்ளார்கள். இப்பாடல் காட்சியை மும்பையில் பிரம்மாண்டமாக உருவாக்கபட்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சந்தன், ஐஸ்வர்யா அர்ஜுனுடன் இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகி பாபு, பிளாக் பாண்டி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை ஹெச்.சி.வேணுவும், இசையை ஜாசி கிஃப்ட்டும், படத்தொகுப்பை கே.கே.யும் கவனிக்கிறார்கள்.

#Arjun #AishwaryaArjun #SriramFilmInternational #KadhalinPonVeedhiyil #Chandan #PoonamSha #PriyankaSha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;