முதல் நாள் கலெக்ஷனில் ரெக்கார்டு பிரேக் செய்த ‘ரெமோ’!

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது

செய்திகள் 8-Oct-2016 11:48 AM IST Chandru கருத்துக்கள்

24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட விளம்பர யுக்திக்கு, எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்துள்ளது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டுமே 425க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான ‘ரெமோ’ திரைப்படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

இப்படத்திற்கான விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும், படத்தின் முதல் நாள் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அதிகாலை சிறப்புக் காட்சிகள் உட்பட சென்னையில் பல தியேட்டர்களில் முதல் நாளில் 6 காட்சிகள் ‘ரெமோ’வை திரையிட்டனர். இதனால், முதல் நாளில் சென்னையில் மட்டுமே 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்தது. அதோடு, தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 8 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் கபாலி, தெறியைத் தொடர்ந்து ‘ரெமோ’தான் முதல் நாள் கலெக்ஷனில் அதிகபட்சமாம்.

#Sivakarthikeyan #Remo #Superstar #Rajinikanth #Kabali #Vijay #Theri #BhagyarajKannan #Ranjith

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;