விஷாலுடன் துப்பறிய கிளம்பும் அக்‌ஷரா ஹாசன்!

தனுஷ், அஜித்தை தொடர்ந்து விஷாலுடன் இணையும் அக்‌ஷரா ஹாசன்!

செய்திகள் 8-Oct-2016 11:14 AM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களுடன் வினய், பிரசன்னா, கே.பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்போது இப்படத்தில் ஹீரோவுக்கு சம்மான ஒரு கேரக்டரில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷ‌ரா ஹாசனும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தனுஷுடன் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்த அக்‌ஷரா ஹாசன் தற்போது சிவா இயக்கத்தில் ‘அஜித்-57’ படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார். ஒரு பக்கம் விஷால் நடித்திருக்கும் ‘கத்திச்சண்டை’, மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

#AksharaHaasan #Vishal #Thupparivalan #Mysskin #Dhanush #Ajith #Shamithab #Thala57 #Vinay #Prasanna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;