ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள கார்த்தியின் ‘காஷ்மோரா’ பட டிரைலர் நேற்று யு ட்யூபில் 3 மணியளவில் வெளியிடப்பட்டது. கார்த்தியின் வித்தியாசமான கெட்அப், இளவரசியாக நயன்தாரா, பரபர போர்க்காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ படத்தின் டிரைலர் முதல் 17 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வையிடல்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
கார்த்தியின் கேரியரில் இதுவரை எந்தப் பட டிரைலரும் இத்தனை அதிவேகமாக 10 லட்சத்தை எட்டியதில்லை. அதோடு ‘காஷ்மோரா’ டிரைலர் இந்திய டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்திலும் தற்போது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
#Kaashmora #Karthi #Nayanthara #SriDivya #Gokul #SanthoshNarayanan #OmPrakash #DreamWarriorPictures
அறிமுக இயக்குனர் ரஜத் ரசிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் பிரீத்சிங் நடித்து சமீபத்தில் வெளியான...
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய்வரும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை...
‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில்...