றெக்க - விமர்சனம்

பரபரக்கிறது இந்த ‘றெக்க’

விமர்சனம் 7-Oct-2016 6:15 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Rathina Shiva
Production : B. Ganesh
Starring : Vijay Sethupathi, Lakshmi Menon
Music : D. Imman
Cinematography : Dinesh Krishnan
Editing : Praveen K. L

தனது சமீபத்திய ரிலீஸ்களான தர்மதுரை, ஆண்டவன் கட்டளை படங்களே இன்னும் ஒருசில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்குள்ளாகவே இன்னொரு படத்துடன் ‘றெக்க’ கட்டி வந்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவரின் இந்த மாஸ் அவதாரம் அவர் கேரியரை எந்தளவுக்கு உயரப் பறக்க வைக்கும்?

கதைக்களம்

கே.எஸ்.ரவிகுமாரின் செல்ல மகன் விஜய்சேதுபதி. அவர் என்ன செய்தாலும் பெற்றோர் அதற்கு ஆதரவமாகவே இருப்பார்கள். உண்மையான காதலர்களுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அவர்களை சேர்த்து வைப்பவர் விஜய்சேதுபதி. ஒரு சூழ்நிலையில், மதுரையில் பெரிய தாதா ஒருவரின் மகளான லக்ஷ்மிமேனனையே தூக்குகிறார் விஜய்சேதுபதி. யாருக்காக, எதற்காக லக்ஷ்மிமேனனை விஜய்சேதுபதி தூக்கி வருகிறார்? அதன் பிறகு என்னென்ன களேபரங்கள் நடக்கின்றன என்பதே ‘றெக்க’.

படம் பற்றிய அலசல்

இது ஒரு வழக்கமான மசாலா படம் என்பதால், விஜய்சேதுபதியின் முந்தைய படங்களிலிருந்த யதார்த்தம், லாஜிக் விஷயங்களெல்லாம் இல்லையே என்ற தொணியில் படத்தை ஆராயாமல் ஒரு பொழுதுபோக்குப் படமாக ‘றெக்க’யை அணுக வேண்டியது அவசியம். ஹரி பட ஸ்டைலில் ஒரு பரபர திரைக்கதையை உருவாக்கி அதை சுவாரஸ்யமான படமாக்க முயன்றியிருக்கிறார் ரத்தினம் சிவா. இமானின் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தாலும், அவை இடம்பெறும் இடங்கள் சரியாக அமையாததால் படத்தின் வேகத்தை குறைக்கின்றன. இருந்தபோதும், ஆக்ஷன் படத்திற்குரிய மாஸ் பின்னணி இசையை வழங்கத்தவறவில்லை இமான். சரியான கேமரா கோணங்கள், க்ரிப்பான எடிட்டிங் ஆகியவை படத்திற்கு பக்கபலம்.

நடிகர்களின் பங்களிப்பு

எந்த கேரக்டராக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடும் விஜய்சேதுபதி, ‘சேதுபதி’க்குப் பிறகு மீண்டும் ஆக்ஷன் களத்தில் குதித்திருக்கிறார். இந்தமுறை கொஞ்சம் மசாலா தூக்கலான மாஸ் ஹீரோ அவதாரம். இருந்தபோதும், இப்படத்தின் ஹீரோ என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகச் செய்து அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் விஜய்சேதுபதி. கொஞ்சம் பூசினாற்போல் தோற்றமளிக்கும் லக்ஷ்மேனன், ஒட்டாத ஓவர் மேக்அப்பில் படம் முழுக்க வந்துபோகிறார். அவரின் முந்தைய படங்களை கம்பேர் செய்கையில் இதில் நடிப்பதற்கு பெரிய வேலை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. ‘தொடரி’யில் கொஞ்சம் சறுக்கிய ஹரிஷ் உத்தமனுக்கு இப்படத்தில் நல்ல கேரக்டர். அவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார். ‘வேதாளம்’ கபீர் தனது அதிரடி ஆக்ஷன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், கிஷோர் போன்றோரும் அந்தந்த கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

பலம்

1. விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை
2. விஜய்சேதுபதி
3. குடும்ப ரசிகர்களை கவரும் வகையிலான காட்சியமைப்புகள்

பலவீனம்

1. பாடல்கள்
2. இரண்டாம்பாதியில் தொய்வடையும் ஒருசில காட்சிகள்

மொத்தத்தில்...

வழக்கமான விஜய்சேதுபதி படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மசாலா படமாக ‘றெக்க’ உருவாக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களை பொழுதுபோக்கத்தவறவில்லை இப்படம். இந்த ஆயுதபூஜை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று ஜாலியாகப் பார்க்க ஏற்றபடம்.

ஒரு வரி பஞ்ச் : பரபரக்கிறது இந்த ‘றெக்க’

ரேட்டிங் : 4.5/10

#RekkaMovieReview #Rekka #VijaySethupathi #LakshmiMenon #DineshKrishnan #RathinaShiva #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;