கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

செய்திகள் 7-Oct-2016 2:02 PM IST VRC கருத்துக்கள்

கோகுல் இயக்கத்தில், ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் கார்த்தி மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘காஷ்மோரா’ படததின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது. விழாவில் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,

‘‘மூன்று வருங்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் இது. இது ஒரு பீரியட் ஃபிலிம் என்று சொன்னபோதே இப்படத்திற்ச்கு இசை அமைப்பது சவாலாக இருக்கும் என்று நினைத்தேன. ஆனால் எனக்கு நிறைய கால அவகாசம் கிடைத்ததால் ரிலாக்சாக பணியாற்ற முடிந்தது. இப்படத்தில் பணியாற்றியது மாறுபட்ட ஒரு அனுபவம். இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குனர் கோகுல் பேசும்போது, ‘‘முதலில் என்னோட சீஃப் டெக்னீஷியன்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். சீஃப் டெக்னீஷியன்கள் யார் என்றால் என்னோட உதவி இயக்குனர்கள் தான்! அவர்களது ஒத்துழைப்பு இல்லை என்றால் நான் நினைத்தது மாதிரி இந்த படத்தை எடுத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட 3 வருட காலம் என்னுடனேயே எல்லோரும் பயணித்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த படியாக தான் மற்ற டெக்னீஷியனகள்! இவர்களை எல்லாம் தாங்கி நின்றவர் கார்த்தி சார்! இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் கார்த்தி சார் தான்! அவர் இதில் போட்டிருக்கிற உழைப்பு அப்படி! இந்த படத்தை பொறுத்தவரைக்கும் இப்படத்தின் ஹீரோ யார் என்றால் தயாரிப்பாளர்கள் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு சார் ஆகியோர்கள் தான்! ஏன் என்றால் இந்த கதையை நம்பி, என்னை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க முன் வந்ததற்கு துணிச்சலும் தைரியமும், பொறுமையும் வேண்டும். அது அவர்களிடத்தில் இருந்ததால் தான் இப்படம் நான் நினைத்தது மாதிரி எடுக்க முடிந்ததுஅ. அவர்களுக்கு நன்றி’’ என்றார்.

கார்த்தி பேசுகையில், ‘‘இந்த கதையை கேட்டபோது ஒரு அசரீரியில் கேட்டது மாதிரி தான் இருந்தது. கதை கேட்டதும் இதை படம் பண்ண பெரிய செலவாகும் என்று தெரிந்தது. ஆனால் அதை ஒரு சேல்ஞ்சிங்கா எடுத்து தயாரித்திருக்கிறார்கள் பிரகாஷ் பாபு மற்றும் பிரபு இருவரும். எதையும் சரியான திட்டமிடல்களுடன் செய்ய கூடியவர்கள் இருவரும் என்பதால் எனக்கும் தைரியம் வந்தது. இந்த படத்தை பொறுத்தவரை நாம் சின்ன விஷயம் என்று நினைக்கிற விஷயத்திற்கு பின்னால் கூட நிறைய உழைப்பு வேண்டி இருந்தது. செட், விஷுவல்ஸ் ஆகியவற்றிற்கு மிக முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் இதில் நிறைய பேரோட உழைப்பு இருந்திருக்கிறது. ஆனால் எல்லோரும் ஒரே கருத்தோட பணியாற்றி ‘காஷ்மோரா’வை பிரம்மாண்டமான ஒரு படமாக கொண்டு வந்துள்ளார்கள். இந்த தீபாவளியை செம கொண்டாட்டத்துடன் கொண்டாட கூடிய ஒரு படமாக இருக்கும் இந்த காஷ்மோரா இருக்கும்’’ என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ‘‘ஹிஸ்டாரிக்கல், இன்றைய காலகட்டம் என்று இரு மாறுபட்ட கதை களத்தில் பயணிக்கும் படம் இது. இப்படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தோற்றுவிடக் கூடாது என்ற ஒரே கருத்துடன் பணியாற்றினார்கள். இந்த படம் துவங்கிய நேரத்தில் ராஜ்மௌலியின் ‘பாகுபலி’ படம் வெளியானது. அந்த படம் எப்படிப்பட்ட படம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த படத்தின் சாயல் இதில் எங்கும் வந்துவிட கூடாது என்பதற்காகவே நிறைய ஹோம் ஒர்க் பண்ண வேண்டியதாக இருந்தது. ஆனால் எல்லாம் முடிந்து இப்போது படத்தை பார்த்தபோது எல்லோருக்கும் திருப்தி ஏற்படுள்ளது. நிச்சயம் இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். தீபாவளியை மேலும் கொண்டாட்டமாக கொண்டாடும் விதமாக இப்படம் இருக்கும்’’ என்றார்.

இவர்கள் தவிர விழாவில கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதிவ்யா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், பாடலாசிரியர்கள் லலிதானந்த், முத்தமிழ், படத்தொகுப்பாளர் சாபு ஜோசஃப் மற்றும் பலர் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;