ஹிந்தியில் வெளியாகி வசூலை குவித்த படம் ‘ராகினி எம்.எம்.எஸ்.2’. இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. தமிழில் ‘ராத்ரி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்திருக்கிறார். உலக அளவில் பெரும் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வரும் சன்னி லியோன் இப்படத்தில் கவர்ச்சி கேரக்டரில் நடித்திருப்பதுடன் பேயாகவும் நடித்திருக்கிறார். விக்ரமுடன் ‘சாமுராய்’ படத்தில் கதாநாயகியாக நடித்த அனிதா, பர்வீன் தபாஸ், சந்தியா மிருதுல், கரண் தாலுஜா ஆகியோரும் நடித்திருக்கும் இப்படத்தில் சன்னி லியோன் நடனமாடிய ‘பேபி டால்’ பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலை யு-ட்யூபில் சுமார் 8 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் இப்பாடல் ‘தெறி தெறிக்கப் பார்த்தா…’ என்று துவங்குவது மாதிரி இயக்குனர் ஆதிராஜன் எழுத, அதனை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். ‘ராகினி எம்.எம்.எஸ்.2’ படத்தை ஹிந்தியில் தயாரித்த ஸ்ரீபாலாஜி மோஷன் பிக்சர்ஸ்’ பட நிறுவனமே தமிழ், தெலுங்கிலும் இப்படத்தை வெளியிடுகிறது. இந்தா படத்தை பூஷன் பட்டேல இயக்கியுள்ளார்.
#RamyaNambeesan #SunnyLeone #RahiniMMS #Anitha #Rathri #SandhyaMiruthul
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...
சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சாம்பியன்’. இந்த படத்தில் அறிமுகம் விஷ்மா கதையின்...
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’....