தமன் நடிப்பில் அறிமுக இயக்குனரின் ‘புயலா கிளம்பி வர்றோம்!

இளைஞர்களுக்கு புது பாதை காட்டும் புயலா கிளம்பி வர்றோம்!

செய்திகள் 6-Oct-2016 2:05 PM IST VRC கருத்துக்கள்

‘சேதுபூமி’, ‘தொட்டால் தொடரும்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த தமன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ’புயலா கிளம்பி வர்றோம்அ’. அறிமுக இயக்குனர் ஜி.ஆறுமுகம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் தமனுடன் கதாநாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, ஆர்.என்.ஆர்.மனோகர், அழகன் தமிழ்மணி, ஜெரால்டு, ரிஷா, ’பசங்க’அ சிவகுமார், ‘கும்கி’ அஸ்வின, ஷர்மிளா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

‘ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஹரிஹரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாள்ர் சார்லஸ் தனா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை விஜய்யும, படத்தொகுப்பை சதீஷ் குமாரும் கவனித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கதிரேசன், பி.எல.தேன்ப்பன், அழகன் தமிழ்மணி மற்றும் கில்ட் தலைவர் ஜாக்குவார் தங்கம்,அ இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ் முதலானோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

‘புயலா கிளம்பி வர்றோம்’ குறித்து இயக்குனர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, ‘‘உள்ளூர் அரசியல் வாதியால் அந்த ஊர் மக்கள் படும் வேதனைகள் ஏராளம். இந்த சூழ்நிலையில் கதையின் நாயகன் தமது நண்பர்களுடன் தொழில் தொடங்குகிறார். இவர்கள் மீது அரசியல்வாதியின் பார்வை படுகிறது. நாயகனையும அவரது நண்பர்களையும் விரட்ட அரசியல் வாதி எடுக்கும் ஆயுதம் என்ன? அதே நேரம் அரசியல்வாதியை அரசியல் விட்டே துரத்த நாயகனும், அவருடைய நண்பர்களும் கையாண்ட விதம் அரசியல் வாதியின் ஆயுதத்தை விட கொடுமையானது! அது என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு இப்படம் பதில் தரும். விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணிக்கும் இப்படம் இளைஞர்களுக்கு புது பாதை காட்டும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

#PuyalaKilambiVarrom #Thaman #Perarasu #AVenkatesh #KumkiAshwin #JayasreeMovieMakers

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;