விஜயகாந்த் பட இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் படம்!

‘உச்சத்துல சிவா’ இயக்குனர் ஹீரோவாகும் படம் ‘பணம் காய்க்கும் மரம்’

செய்திகள் 6-Oct-2016 11:34 AM IST VRC கருத்துக்கள்

விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கிய ஜேப்பி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘உச்சத்துல சிவா’. கரண் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் இயக்குனர் ஜேப்பியும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ‘உச்சத்துல சிவா’ படத்தை இயக்கி முடித்த கையோடு ஜேப்பி ‘பணம் காய்க்கும் மரம்’ என்ற முழுநீள் நகைச்சுவை படம் ஒன்றையும் இயக்கி முடித்து விட்டார். இப்படத்தில் கதாநாயகனாக அக்‌ஷய் நடிக்க, இவரது அண்ணனாக இன்னொரு கதாநாயகனாக ஜேப்பி நடிக்கிறார். நாயகிகளாக அகல்யா, அன்விகா நடிக்கின்றனர். இவர்களுடன் ராஜ் குல்கர்னி, சோனு பாண்டே ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ‘போஸ்’ வெங்கட், படவா கோபி, பாரதிகண்ணன், கௌதமி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.கணேசன் இசை அமைக்கிறார். ‘தர்ஷ் ஷோ கம்பெனி’ சாபில் ஏ.ராமலிங்கம் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

#PanamKaaikkumMaram #Jaypee #Vijayakanth #Sudhesi #Akalya #Anvika #UchathilaSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;