ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஜெயித்த ‘தர்மதுரை’!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி டாக்டராக நடித்த ‘தர்மதுரை’ திரைப்படம் வெற்றிகரமாக 50வது நாளை எட்டியுள்ளது!

செய்திகள் 6-Oct-2016 10:54 AM IST Chandru கருத்துக்கள்

‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் விஜய்சேதுபதிக்கு தனித்ததொரு அடையாளத்தைக் கொடுத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ படம் சிற்சில காரணங்களால் ரிலீஸாகாமல் தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவரின் இயக்கத்தில் விஜய்சேதுபதி டாக்டராக நடித்து ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியானது ‘தர்மதுரை’ திரைப்படம். இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாக நடித்தனர்.

கிராம மக்களுக்கான மருத்துவ சேவையை முன்னிறுத்தி விழிப்புணர்வும், விறுப்விறுப்பும் கலந்து சீனு ராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ திரைப்படம் ஆர்ப்பாட்டமில்லாமல் ரிலீஸாகி, அமைதியாக வரவேற்பைப் பெற்று, தயாரிப்பாளருக்கும், வெளியீட்டாளர்களுக்கும் லாபம் தந்ததோடு தற்போது வெற்றிகரமாக 50வது நாளையும் எட்டியிருக்கிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விஜய்சேதுபதியின் இன்னொரு படமான ‘ஆண்டவன் கட்டளை’யும் ரிலீஸாகி நல்ல வரவேற்போடு ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ‘தர்மதுரை’யும் இன்னும் ஒருசில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது சிறப்பு. அதோடு, இந்தவாரம் அவரின் இன்னொரு படமான ‘றெக்க’யும் ரிலீஸாகவிருப்பது விஜய்சேதுபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#Dharmadurai #VijaySethupathi #Tamannah #SeenuRamasamy #YuvanShankarRaja #AishwaryaRajesh #RKSuresh #SrustiDonge

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;