பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்த எம்.எஸ்.தோனி!

முதல் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலை குவித்துள்ளது எம்.எஸ்.தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படம்

செய்திகள் 6-Oct-2016 10:38 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த ‘எம்.எஸ்.தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டதைவிட வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டுமே இந்திய அளவில் ரூபாய் 25 கோடி (கிராஸ்) வசூலைக் குவித்த இப்படம் முதல் 3 நாட்களில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் கிராஸ் வசூலைப் பெற்றது.

வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமையும் இப்படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. இதனால் 4ஆம், 5ஆம் நாட்களில்கூட கிட்டத்தட்ட தலா 10 ரூபாய் வசூலைக் குவித்தது. இதனால், படம் வெளியான முதல் 5 நாட்களிலேயே இந்திய பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை எட்டி சாதனை புரிந்திருக்கிறது ‘எம்.எஸ்.தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி’. வாழ்க்கை வரலாற்றுப் படம் ஒன்றிற்கு இத்தனை பெரிய வசூல் வேறெந்த இந்திய படத்திற்கும் இதுவரை கிடைத்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழில் டப் செய்யப்பட்ட ‘எம்.எஸ்.தோனி’ படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

#MSDhoniTheUntoldStory #NeerajPandey #SushantSinghRajput #AnupamKher #KiaraAdvani #AmaalMallik

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் தான் ஷபானா - டிரைலர்


;