Direction : R. S. Durai Senthilkumar
Production : Grass Root Film Company
Starring : Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran
Music : Santhosh Narayanan
Cinematography : Venkatesh S
Editing : Prakash Mabbu
தங்கமகன், தொடரி படங்கள் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், ‘கொடி’ மூலம் தனது மார்க்கெட்டை மீண்டும் உயரத்தில் பறக்கவிட ஆயத்தமாகியுள்ளார் ‘இரட்டை’ தனுஷ். அதன் முதல்கட்டமாக ‘கொடி’ டிரைலரை தற்போது வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். எப்படி இருக்கிறது இந்த டிரைலர்?
மோஷன் போஸ்டரிலேயே இரண்டுவிதமான தனுஷ் கெட்அப்களையும் ரசிகர்கள் பார்வைக்கு கொண்டுவந்துவிட்டதால், டிரைலரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் விஷயம் இரண்டு தனுஷ்களில் யாராவது வில்லனாக இருப்பார்களா? த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் எந்த தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்பன போன்ற விஷயங்களையே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
ஒரு தனுஷ் அரசியல்வாதி என்பது ஏற்கெனவே தெரியும் என்பதால், இன்னொரு தனுஷுக்கு எப்படிப்பட்ட கேரக்டர் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், முழுக்க முழுக்க இந்த டிரைலரில் வியாபித்திருப்பது அரசியல்வாதி தனுஷ் மட்டுமே. ஒன்றிரண்டு இடங்களில் தலைகாட்டி மறைகிறார் மற்றொரு தனுஷ். அனேகமாக பெரிய திரையில் அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கலாம். அரசியல்வாதி தனுஷுக்கு ஜோடியாக வரும் த்ரிஷாவுக்கு இப்படத்தில் ‘நெகடிவ்’ கேரக்டர் என்பது ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்ட விஷயம்தான். கிட்டத்தட்ட அது இந்த டிரைலரின் ஒருசில காட்சிகள் மூலம் யூகிக்க முடிகிறது. இருந்தபோதும், த்ரிஷாவும் ஒரு அரசியல்வாதி என்பது படம் பார்க்கும் ஆவலை அதிகரித்திருக்கிறது. மேக்அப் குறைவான த்ரிஷா அத்தனை அழகாக இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் இன்னொரு தனுஷுக்கு ஜோடி என்பதைத் தவிர வேறெதையும் இந்த டிரைலரில் ‘ரிவீல்’ செய்யவில்லை.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயமென்றால்... அது எஸ்.ஏ.சந்திரசேகரின் என்ட்ரிதான். அவர் யார்? இப்படத்தில் அவருக்கு என்ன மாதிரியான கேரக்டர்? அவர் நடிக்க வேண்டிய அளவுக்கு அது அத்தனை முக்கியமான கதாபாத்திரமா என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை வெள்ளித்திரையில்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘நாம பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க... அவன் பொறந்ததே அரசியலுக்காகதான்’, ‘வந்தது, வாழ்ந்தது, செஞ்சது, சேர்ந்ததுங்கறதவிட நமக்கப்புறம் எது நின்னதுங்கறதுதான்டா மேட்டரு...’, ‘எப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான்டா அரசியல்வாதி...’ ‘நீங்கெல்லாம் பேசியே ஜெயிச்சவங்க... நான் ஜெயிச்சுட்டு பேசுறேன்...’, ‘எல்லோரும் பொறக்கும்போது சிங்கிள்தான் மேடம்... நான் பொறக்கும்போதே டபுள்’, ‘எனக்கு அரசியலையும் தெரியும்... அது நல்லவங்கள என்ன பண்ணும்ன்னும் தெரியும்’ என 2 நிமிட டிரைலருக்குள் இடம்பெற்றிருக்கும் அத்தனை வசனங்களும் வெகுவாக வசீகரிக்கின்றன. ஆனால், வெறும் வசனங்களாகவே டிரைலர் நகர்ந்துவிடுகிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக இருக்கும் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. மோஷன் போஸ்டரில் பெரிதாக பாராட்டப்பட்ட சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, டிரைலரில் பெரிதாக வசீகரிக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. ஆனால், ‘பொட்டக் கோழி...’ பாடல் அசத்தல்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்... தங்கமகன், தொடரியைவிட ‘கொடி’யின் டிரைலர் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், ‘வேலையில்லா பட்டதாரி’யின் டிரைலர் அளவுக்கு பெரிய அளவில் இது கவனம் பெறுமா என்பதும் சந்தேகமே. ஆர்.எஸ்.துரைசெந்தில்குமாரின் திரைக்கதை யுக்தி கைகொடுக்கும் பட்சத்தில் ‘கொடி’ தீபாவளி ரேஸில் உயரப் பறக்க வாய்ப்பிருக்கிறது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...