விஜய் அப்பாவை அரசியல்வாதியாக்கிய ‘கொடி’ இயக்குனர்!

தனுஷின் கொடியில் அரசியல்வாதியாக களமிறங்கும் விஜய் அப்பா!

கட்டுரை 5-Oct-2016 3:35 PM IST RM கருத்துக்கள்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொடி’. இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸும், மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனமும இணைந்து தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக திரைகு வரவிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது தனுஷ் பேசும்போது,

‘‘கொடி’ படத்தில் முதன் முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். நான் நடித்த ‘கொக்கி குமார்’ கேரக்டர் அரசியல் சார்ந்தது என்றாலும் படம் முழுக்க அரசியல் வாதியாக நடித்திருப்பது இப்படத்தில் தான்! இரண்டு வேடங்களில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷ்யம் இல்லை என்பதை இப்படத்தில் நடித்ததன் மூலம் உணர்ந்தேன்’’ என்றார்.

இயக்குனர் துரை செந்தில்குமார் பேசும்போது, ‘‘நான் வெற்றிமாறன் சார் கூட உதவி இயக்குனாரக பணியாற்றும்போது தான் தனுஷ் சாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருடன் ஏற்பட்ட நட்பால் தான் இப்படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் தனுஷ் சார் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தில் வரும் ஒரு அரசியல்வாதியின் கேரக்டருக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ரொம்பவும் பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க அழைத்தேன். ஆனால் அவர், ‘‘தம்பி நான் வேறு இயக்குனர் இயக்கும் படங்களில் நடிப்பதில்லை. என்னை விட்டிடுங்கள்’ என்றார்! சரி அந்த கேரக்டரில வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது எஸ்.ஏ.சி.சார் ஃபோன் செய்து, ‘தம்பி, நான் அந்த கேரக்டரில் நடிக்க ரெடி’ என்றார்! ஏன் சார் என்று கேட்டபோது, ‘தம்பி நீங்கள் நடிக்க கூப்பிட்ட விஷயத்தையும் நான் நடிக்க முடியாது என்று சொன்ன விஷயத்தையும் என் மனைவி ஷோபாவிடம் சொன்னேன். அதை சொன்னதும் என் மனைவி என்னை திட்டி விட்டார். தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்து விட்டீர்களே என்று! என் மனைவி தனுஷின் ரசிகை! அதனால் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்’’ என்றார். இதில் எஸ்.ஏ.சி சார் ஏற்றிருக்கும் வேடம் மாறுபட்டதாக இருக்கும்’’ என்றார்.

இப்படத்தில தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்க, கதாநாயகிகளாக த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சரண்யா, மாரிமுத்து, காளி வெங்கட் முதலானோரும் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;