‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ‘ஜோக்கர்’ படப் புகழ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படம் ’ஆண் தேவதை’. கடந்த மாதம் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. முழுக்க முழுக்க சென்னை பின்னணியில் நடக்கும் இந்த கதையில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுடன் கஸ்தூரி, கவின், இளவரசு, பிகதீஷ், மயில்சாமி உட்பட பலர் நடிக்கின்றனர். 'சிகரம் சினிமாஸ்' என்ற நிறுவனம் சார்பில் இயக்குனர் தாமிரா, ஃபக்ருதீன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு விஜய் மில்டன், இசைக்கு ஜிப்ரான், படதொகுப்புக்கு காசிவிஸ்வநாதன், கலை இயக்கத்திற்கு ஜாக்சன் என கூட்டணி அமைந்துள்ள இப்பட்த்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம்...
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
தமிழ் சினிமாவில் அவ்வப்போது பெண் இயக்குனர்களின் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பெரிய அளவில்...