‘எந்திரன் 2’ குறித்து புதிய தகவல் வெளியிட்ட ஷங்கர்!

‘எந்திரன்’ 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு எத்தனை சதவிகிதம் முடிவடைந்துள்ளது என்பதை இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார்

செய்திகள் 5-Oct-2016 12:20 PM IST Chandru கருத்துக்கள்

ட்விட்டர், ஃபேஸ்புக் என இரண்டு சமூகவலைதளத்திலுமே அதிகாரபூர்வ அக்கவுன்ட்டை இயக்குனர் ஷங்கர் வைத்திருந்தாலும், அதில் சொற்பமான விஷயங்களையே பதிவு செய்வார் அவர். அதிலும் தன் படங்கள் குறித்து அதில் பெரிதாக எதுவும் இருக்காது. தான் பார்த்து வியந்த படங்களைப் பற்றியும், அதை உருவாக்கியவர்களைப் பாராட்டியுமே பெரும்பாலான பதிவுகள் ஷங்கரின் சுவரில் இடம்பெறும். எப்போதாவது அத்தி பூத்தாற்போல் தான் இயக்கிவரும் ‘எந்திரன் 2’ படம் குறித்தும் செய்தியும், புகைப்படமும் வெளியிடுவார். ஜுன் 14ஆம் தேதிக்குப் பிறகு, தற்போது ‘2.0’ குறித்த புதிய தகவல் ஒன்றையும், புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார் ஷங்கர்.

அதில், ஷங்கரும் ‘சிட்டி’ ரஜினியும் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் ஒன்றும், ஒட்டுமொத்தமாக 3ல் 2 பங்கு படப்பிடிப்பை 150 நாட்களில் படமாக்கியுள்ளோம் என்ற தகவலையும் பகிர்ந்திருக்கிறார் ஷங்கர். 100 நாட்களில் 50% முடிவடைந்ததாக ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த இயக்குனர், இப்போது 150 நாட்களில் 65% சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம், இன்னும் 35% சதவிகித படப்பிடிப்புகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அதையும் இந்த வருடத்திற்குள்ளாகவே முடித்துவிட்டால், 2017 துவக்கத்திலேயே ‘எந்திரன் 2’வுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக துவங்கிவிடும். படம் 2017 தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;