‘சைத்தான்’ டீஸரில் ஆட்சேபத்திற்குரிய வரிகள் நீக்கம்!

விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ புதிய டீஸர்!

செய்திகள் 5-Oct-2016 10:38 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சைத்தான்’ படத்தின் டீஸர் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த டீஸர் வீடியோவின் இசையில் ஒலிக்கும் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகளில் சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயல் ஒட்டி இருப்பதால் அதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். இதை கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, அந்த வரிகளை மாற்றம் செய்ய முடிவெடுத்து அந்த வீடியோவை யு-டியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூகவலை தளங்களிலிருந்து நேற்று நீக்கி விட்டார். அதற்கு பதிலாக புதிய வரிகளை கொண்டு உருவாக்கிய வீடியோவை இன்று மாலை வெளியிடவிருக்கிறார் விஜய் ஆண்டனி. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘சைத்தான்’ படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;