ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் 4 முன்னாள் கதாநாயகிகள் நடிக்கும் படம்!

ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, ஊர்வசி, சுஹாசினி, குஷ்பு நடிக்கும் படம்!

செய்திகள் 5-Oct-2016 10:38 AM IST RM கருத்துக்கள்

‘சுப்பிரணமணியபுரம்’, ‘பசங்க’, ‘புத்தகம்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தன், ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் களம் இறங்கினார். ‘வானவில் வாழ்க்கை’ படத்தை தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் சத்தமில்லாமல் இப்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முன்னாள் கதாநாயகி நடிகைகளான ஊர்வசி, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் இது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் ஆஸ்திரேலியாவிலேயே நடைபெறவிருக்கிறது என்றும் இப்படத்தில் சில முன்னணி நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அந்த நடிகர்கள் யார் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#JamesVasanthan #RadhikaSarathkumar #Kushboo #Oorvasi #Suhasini #Subramaniyapuram #Pasanga #Puththagam #VaanavilOruVaazhkkai #VijayTV

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;