‘பவர் பாண்டி’ தனுஷுக்கு செல்வராகவன் பாராட்டு!

‘பவர் பாண்டி’யை பார்த்து நெகிழ்ந்துபோன செல்வராகவன்!

செய்திகள் 4-Oct-2016 5:13 PM IST VRC கருத்துக்கள்

தனுஷ் இயக்கி வரும் ‘பவர்பாண்டி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும இப்படம் சினிமா ஸ்டண்ட் நடிகர் பற்றிய படம் என்று கூறப்படுகிறது. இதில் ராஜ்கிரணுடன் பிரசன்னா, சாயா சிங், உள்ளிட்ட பலர் நடித்து வர, ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் பணிகள் நடக்கும்போது அந்த காட்சிகளை தனுஷ், செல்வராகவனுக்கு காண்பித்துள்ளார். அந்த காட்சிகளை பார்த்து இயக்குனர் செல்வராகவன், ‘‘பவர் பாண்டி’யின் காட்சிகளை பார்த்து அசந்துபோய் விட்டேன், ரொம்பவும் வேடிக்கையாகவும் மாயாஜாலமாகவும் இருக்கிறது! தனுஷ், ராஜ்கிரண் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது’’ என்று தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து தனுஷும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நன்றி செல்வா, எல்லா புகழும் உங்களுக்கே’ என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ்!

#Dhanush #Selvaraghavan #AishwaryaDhanush #VenkaiahNaidu #PowerPandi #RajKiran #Kodi #KeerthiSuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;