ஜி.வி.யுடன் ‘KIK’ல் இணைந்த ஜீவா!

ஜி.வி.பிரகாஷ், எம்.ராஜேஷ் கூட்டணியில் ஜீவா!

செய்திகள் 4-Oct-2016 3:28 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தை தீபாவளி ரிலீசாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் ஒரு பிரபல நடிகர் கேமியோ கேரக்டரில் நடிப்பது வழக்கம். அந்த வரிசையில் இப்போது ராஜேஷ் இயக்கி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் ஒரு பிரபலம் நடித்திருக்கிறார்! அவர் ஜீவா. இதனை ஜீ.வி. பிரகாஷே தனது ட்விட்டர் பக்கம் மூலம் அதிகாரபூர்வாக தெரிவித்துள்ளார். ‘KIK’ல் ஜி.வி.பிரகாஷுடன் நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, சிங்கம் புலி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இது அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 19ஆவது படமாகும்.

Jiiva, Kadavul Irukkan Kumaru, M Rajesh, GV Prakash Kumar, RJ Balaji, Nikki galrani, Anandhi, Amma Creations

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;