ஒரே நாளில் 3 படஙகள் - சதீஷ் சாதனை!

காமெடி நடிகர் சதீஷ் புதிய சாதனை!

செய்திகள் 4-Oct-2016 3:10 PM IST VRC கருத்துக்கள்

தற்போதுள்ள காமெடி நடிகர்களில் சதீஷுக்கும் முக்கிய இடம் உண்டு! வருகிற 7ஆம் தெதி வெளியாகவிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, விஜய்சேதுபதியின் ‘றெக்க’, பிரபுதேவாவின் ‘தேவி’ ஆகிய மூன்று படங்களிலும் சதீஷ் நடித்துள்ளார். ரசிகர்களின் ஏதிர்பார்ப்பில் இருக்கும் இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால் சதீஷ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு நடிகர் நடித்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாவது அபூர்வமான விஷயம். அந்த விஷயத்தில் நடிகர் சதீஷ் சாதனை படைத்திருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து சதீஷ் நடிப்பில் ‘பறந்து செல்லவா’, பைரவா, ‘வா டீல்’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்கள் வெளியாகாவிருக்கின்றன.

#Sathish #Remo #Sivakarthikeyan #Devi #PrabhuDeva #Tamannah #Rekka #VijaySethupathi #Lakshmimenon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;