விஜய்யின் ‘பைரவா’வுக்காக கட்டப்படும் பிரம்மாண்ட கோயில்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

செய்திகள் 4-Oct-2016 10:51 AM IST Chandru கருத்துக்கள்

பொங்கல் வெளியீட்டை முன்னிட்டு விஜய்யின் ‘பைரவா’ படத்தின் வேலைகள் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகின்றது. தற்போது திருவிழா கொண்டாட்டங்களுடன் கூடிய பாடல் ஒன்றிற்காக பின்னி மில்லில் பிரம்மாண்ட கோயில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம். ‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலும், விஜய்யும் இணைந்து ஆடிய ‘பாட்டு ஒண்ணு...’ பாடலைவிடவும் பிரம்மாண்டமாகவும், கலர்ஃபுல்லாகவும் ‘பைரவா’ படத்தின் இந்த திருவிழா பாடல் உருவாக்கப்படவிருக்கிறதாம். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருக்கும் இப்பாடலில் விஜய், கீர்த்தி சுரேஷ் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் பங்குபெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#Bairavaa #Vijay #SanthoshNarayanan #Bharathan #KeerthySuresh #VijayaProductions #AzhagiyaTamizhMagan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;