தமிழகத்தில் ‘தோனி’ வசூல் சாதனை!

தமிழகத்தில் 7 கோடி வசூல் செய்த ‘தோனி’

செய்திகள் 4-Oct-2016 10:33 AM IST VRC கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘M.S.DHONI UNTOLD STORY’ திரைப்படம் தமிழகமெங்கும் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியான ஹிந்தி டப்பிங் படங்களில இப்படம் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளதாம். இப்படம் வெளியான முதல் நாளிலேயே பெரும் வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தை வெளியிட்ட பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் தங்களுடைய திரையரங்க வளாகத்தில் கூடுதலான ஸ்கீரின்களில் ‘தோனி’யை திரையிட முன் வந்தனர். இதனால் இப்படம் மேலும் பல வசூல் சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#MSDhoniTheUntoldStory #NeerajPandey #SushantSinghRajput #AnupamKher #KiaraAdvani #AmaalMallik

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் தான் ஷபானா - டிரைலர்


;