தனுஷின் ‘பவர் பாண்டி’க்கு தேசிய விருதை எதிர்பார்க்கலாமா?

தேசிய விருதை வென்ற நடிகர் தனுஷின் இயக்குனராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’க்கு தேசிய விருது கிடைக்குமா?

செய்திகள் 4-Oct-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

சமீபகாலமாக தனுஷ் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நாயகனாக நடித்து வருகிறார். அதோடு தான் தயாரிக்கும் படங்களின் கதைகளையும் நல்ல தரமுள்ளவையாகவே தேடிப்பிடிக்கிறார். அவரின் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்கள் தேசிய விருதை வென்றதுடன் வசூல்ரீதியாகவும் சாதித்தன. அதோடு, விசாரணை படம் தற்போது இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஸ்டன்ட் மேன்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் மையப்படுத்தி டாக்குமென்ட்ரி படம் ஒன்றை இயக்கி வரும் ஐஸ்வர்யா தனுஷ் பிஜேபியின் கேபினட் அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, தேசிய விருதுப் பிரிவில் சண்டைக்கென தனி விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளாராம். தனுஷ் தற்போது இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருக்கும் ‘பவர் பாண்டி’ படமும் ஸ்டன்ட் நடிகர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துதான் உருவாக்கப்படுகிறது. ஏற்கெனவே நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தேசிய விருதை வென்ற தனுஷ் இயக்குனர் பிரிவிலும் தேசிய விருதை வெல்வார் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

#Dhanush #AishwaryaDhanush #VenkaiahNaidu #PowerPandi #RajKiran #Kodi #KeerthiSuresh #Thodari #Kodi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;