மோகன் ராஜா உதவியாளர் இயக்கியுள்ள மலேசிய தமிழ் படம் ‘மறவன்’

தமிழில் வெளியாகும் மலேசிய திரைப்படம் ‘மறவன்’

செய்திகள் 4-Oct-2016 10:23 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் மோகன்ராஜாவிடம் ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’, இயக்குனர் நேசனுடன் ‘ஜில்லா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.டி.புவனேந்திரன் இயக்கியுள்ள தமிழ் படம் ‘மறவன்’. மலேசியா வாழ் தமிழரான இவர் இப்படத்தில் முழுக்க முழுக்க மலேசிய நடிகர், நடிகைகளை மலேசிய தமிழில் பேசி நடிக்க வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவில உருவான இப்படம் சமீபத்தில் அங்கு வெளியாகி ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளதாம்.

இப்படத்தை ’கோல்டன் பீகாக் ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சந்துரு தயாரித்துள்ளார். மலேசியாவில் வெளியாகி வரவேற்பு பெற்ற இப்படத்தை தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும நாடுகளில் வெளியிட இருக்கிறார் மலேசியாவை சேர்ந்த டத்தொ ஸ்ரீரோஷன் தாஸ். குழந்தைகள் கடத்தல் பற்றிய கிரைம் த்ரில்லர் படமான இப்படத்தில் ஹரிதாஸ், குமரேஷ், டெனீஷ், கவிதா, தியாகராஜன், சங்கீதா கிருஷ்ண்சாமி, புஷ்பா நாராயணன், சீலன். ஆர்.எஸ்.ராஜா, தர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ராஜா வச்சலமும் பின்னணி இசையை மார்ஷல் ராபின்சனும் கவனித்துள்ளனர். சென்னையில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட இப்படத்தை பார்க்க இயக்குனர்கள் மோகன் ராஜா, நெல்சன், ‘எடிட்டர்’ மோகன் முதலானோர் வந்திருந்து, படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டினர்.

#Maravan #Ashok #MohanRaja #EditorMohan #VijayMuralee #MaravanPress Meet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;