மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஐஸ்வர்யா தனுஷ்!

ஸ்டன்ட் கலைஞர்களுக்கு விருது - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஐஸ்வர்யா தனுஷ்!

செய்திகள் 3-Oct-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படம் ‘சினிமா வீரன்’. சினிமாவின் நிஜ ஹீரோக்களான சண்டை (ஸ்டன்ட்) கலைஞர்களை பற்றி பேசும் ஆவண படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினிகாந்த் பின்னணி (Voice Over ) பேசுகிறார். இந்த படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யாஅ தனுஷ், நேற்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து, சினிமாவில் சாதனை புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வருடம்தோறும் தேசிய விருது வழங்கி வருகிறது. அதைப் போல சினிமாவில் ரொம்பவும் ரிஸ்க் எடுத்து நடிக்கும் ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷுக்கு ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் ஃபோன் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

#AishwaryaDhanush #CinemaVeeran #Rajinikanth #Kabali #Dhanush #ARRahman #VengaiyaNaidu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;