மலேசியாவில் ஆடியோ ரிலீஸ் செய்யும் சூர்யா: ‘சென்னை 28-2’ சர்ப்ரைஸ்

வெங்கட்பிரபுவின் ‘சென்னை 28’ 2ஆம் பாகத்தின் ஆடியோவை மலேசியாவில் வெளியிடுகிறார் சூர்யா

செய்திகள் 3-Oct-2016 11:24 AM IST Chandru கருத்துக்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் 7வது படமாக உருவாகி வருகிறது ‘சென்னை&600028’ படத்தின் பாகம் 2. முதல் பாகத்தில் நடித்த அதே டீமுடன் விறுவிறுப்பாக தயாராகிவரும் இப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைத்திருக்கிறார். இறுதிகட்ட வேலைகளில் பிஸியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எஸ்3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் வரும் 7ஆம் தேதி முதல் துவங்கவிருக்கிறது. எனவே, ‘சென்னை 28&2’ படத்தின் ஆடியோவை சூர்யா தலைமையில் மலேசியாவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கோலாலம்பூரிலுள்ள மெகா ஸ்டார் ஏரினாவில் மாலை 7 மணியளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Suriya #Chennai600028 #VenkatPrabhu #YuvanShankarRaja #Jai #PremgiAmaran #MirchiShiva #Vaibhav #VijayVasanth #AravindAkash #NithinSathya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;