பழம்பெரும் நடிகர் கே.என்.காளை மரணம்!

பழம்பெரும் நடிகர் கே.என்.காளை மரணம்!

செய்திகள் 3-Oct-2016 11:10 AM IST VRC கருத்துக்கள்

பழம் பெரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல ஆண்டு காலம் பதவி வகித்தவருமான கே.என்.காளை நேற்று முன் தினம் (1-10-16) காலமானார். அவருக்கு வயதுஅ 84. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். தஞ்சை மாவட்டம் கோவிலடியை சேர்ந்த இவரது இயற் பெயர் காளீஸ்வரன். தேவி நாடக சபாவில் நடிகராக இருந்த இவர் பத்தாயிரம் நாடங்களுக்கும் மேல் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், .உட்பட பல முன்னணி நடிகர்களுடன் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள காளையின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘கிடாரி’. இதில் சசிகுமாரை அடிக்கடி செல்லமாக மிரட்டும் கேரக்டரில் நடித்திருத்நார். பல படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ள காளைக்கு கலைமாமணி விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்த்தில் பொருளாளர், செயலாளர், துணைத் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ள கே.என். காளையின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்!

#KNKaalai #Kidaari #Sasikumar #MGR #SivajiGanesan #NadigarSangam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;