சுசீந்திரன், விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்த ‘கபாலி’ பட இயக்குனர்!

சென்னை லயோலா கல்லூரியில் ‘மாவீரன் கிட்டு’ விழா!

கட்டுரை 3-Oct-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நேற்று முன் தினம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இவ்விழாவில் விஷ்ணு விஷால், சுசீந்திரன் ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் தயாரிப்பாளர் சந்திரசாமி ந்டிகர் ஹரிஷ் உத்தமன் இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, ‘‘நான் இயக்கி, தயாரித்த இரண்டு திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்களை இங்கு தான் வெளியிட்டேன். அதை தொடர்ந்து இப்போது மீண்டும் நான் தயாரித்து, இயக்கியுள்ள ‘மாவீரன் கிட்டு’வின் டீசரை இங்கு வைத்து வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்த இடம்’’ என்றார்.

விஷ்ணு விஷால் பேசியது, ‘‘எனக்கு லயோலா கல்லூரி மிகவும் பிடித்தமான இடம். சினிமாவில் உள்ள எல்லோருக்கும் லயோலா கல்லூரிக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். எனக்கும் லயோலா கல்லூரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்னுடைய மனைவி லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார். நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குநர் சமுத்திரகனி பேசும்போது, ‘‘இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறன்’’ என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, ‘‘இப்படத்தின் டீசரை பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும்போது தான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும்போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது’’ என்றார்.

நடிகர் பார்த்திபன் பேசும்போது, ‘‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அழகி’ திரைப்படத்துக்கு பின் இப்படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது எனலாம். அவ்விரு படங்கள் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும் ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி!’’ என்றார்.

#MaaveeranKittu #VishnuVishal #SriDivya #Suseendiran #Ranjith #Parthipan #Samuthirakani #HarishUthaman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;