ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை ரெமோ, றெக்க, தேவி ஆகிய 3 படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. 3 படங்களுக்குமே அந்தந்த படங்களுக்குரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தாலும், சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்திற்கு உச்சபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால்தான். அதோடு, அனிருத்தின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது, பிரம்மாண்ட புரமோஷன் என ‘ரெமோ’ பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட வருகிறது.
இதனால், ‘ரெமோ’ படத்திற்கு மட்டுமே தமிழகத்தில் கிட்டத்தட்ட 50% திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 870க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘ரெமோ’வுக்காக மட்டுமே 425க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். றெக்க படம் 275க்கும் அதிகமாக தியேட்டர்களிலும், ‘தேவி’ 175க்கும் அதிகமான தியேட்டகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Sivakarthikeyan #Remo #24AMStudios #RDRaja #BhagyarajKannan #ResulPookkutty #KeerthySuresh #Anirudh
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...