ஹீரோ இல்லாத பெண்கள் படம் ‘திரைக்கு வராத கதை’

நதியா, இனியா, கோவை சரளா நடிக்கும் ‘திரைக்கு வராத கதை’

செய்திகள் 1-Oct-2016 3:28 PM IST VRC கருத்துக்கள்

நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி, ஏடன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. கதாநாயகன் இல்லாமல் முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை மலையாளத்தில் 30 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள துளசிதாஸ் இயக்கியுள்ளார். எம்.ஜே.டி.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு பிரபல மலையாள பின்னணி பாடகர எம்.ஜி.ஸ்ரீகுமார் இசை அமைக்க, பின்னணி இசையை அரோல் கரொலி அமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தில் நடித்த நதியா, இனியா, சபிதா ஆனந்த், எடன், ஆர்த்தி ஆகியோருடன் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ’பருத்திவீரன்’ சரவணன், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், இயக்குனர் துளசிதாஸ் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை சஞ்சீவ் சங்கர் கவனித்துள்ளார். காதல், காமெடி, ஹாரர், ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் மிக விரைவில் ரிலீஸாகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

#ThiraikkuVarathaKathai #Srikanth #Nadhiya #Iniya #Saravanan #Aarthi #PTSelvakumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கேம் ஓவர் ட்ரைலர்


;