நிஜ சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள படம் ’இந்திரகோபை’

1990-ல் நடந்த உண்மை சம்பவம் ‘இந்திரகோபை’

செய்திகள் 1-Oct-2016 3:23 PM IST VRC கருத்துக்கள்

‘அரிதாரம்’ என்ற படத்தை இயக்கிய விஜய் டி.அலெக்சாண்டர் இயக்கியுள்ள படம் ‘இந்திர கோபை’. ‘அ ந அய்யும் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் லட்சுமிப்ரியா அய்யும்கணபதி தயாரித்துள்ள இப்படத்தில் ராஜு, ஆஷாலதா, விக்கி, மஞ்சு, ஜெயலட்சுமி, கிச்சா, தாமோதரன் ஆகியோர் நடித்துள்ளனர். ’இந்திரகோபை’ படம் பற்றி விளக்கம் தந்த இயக்குனர் விஜய் டி.அலெக்சாண்டர்.

‘‘இந்திரகோபை என்பது ஊர்வன பூச்சிவகையை சேர்ந்தது. மழைக்காலங்களில் மட்டும் வரக்கூடியது. பிறகு அது பவுடராக உதிர்ந்துவிடும். அப்படி உதிரும் பவுடர் பிறகு பல பூச்சிகளாக உருவெடுத்து விடும். அதுபோல் உதிர்ந்த காதல் மீண்டும் புதிய காதலர்களாக உருவெடுப்பார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. இது தான் இப்படத்தின் மைய கரு. தன் மணவாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்தவர்களை ஏற்காத பெற்றோர்களும், அவர்களது சமூகமும் அவர்களை துன்புறுத்தி, வாழ விடாமல ஒழித்து விடுகிறார்கள். உண்மையில் நடந்த இப்படிப்பட்ட சம்பவங்களை மையமாக வைத்துதான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் இயக்குனர்.

விரைவில் ரிலீசாகவிருக்கிற இப்படத்தின் ஒளிப்பதிவை வெள்ளா கேசவன் கவனித்திருக்க, ரெனால்டு ரீகன் இசை அமைத்துள்ளார். பாடல்களை அருண்பாரதி எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;