8-ஆம் தேதி களமிறங்கும் சிம்புவின் மதுரை மைக்கேல்!

8-ஆம் தேதி வெளியாகும் மதுரை மைக்கேல் டீஸர்!

செய்திகள் 1-Oct-2016 2:44 PM IST VRC கருத்துக்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு கேரக்டர் மதுரை மைக்கேல்! இன்னொன்று 60 வயதுடைய அஸ்வின் தாத்தா! இந்த இரண்டு கேரக்டர்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில் சிம்புவின் மூன்றாவது கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாரகள் அவரது ரசிகர்கள்! இந்நிலையில் முதலாவதாக வெளியான மதுரை மைக்கேல் கேரக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் பணிகள் முடிந்து விட்டதால் அந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட டீஸரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் ‘AAA’ குழுவினர். இந்த டீஸரை வருகிற 8-ஆம் தேதி பிறக்கும் நேரமான 12 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள். சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

#AnbanavanAsaradhavanAdangadhavan #STR #AAA #Shriya #Tamannah #Silambarasan #MaduraMichael

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;