மனோபாலாவிடமிருந்து ‘பாமபு சட்டை’யை கைபற்றிய விநியோகஸ்தர்!

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் படத்தை தயாரிக்கும் விநியோகஸ்தர்!

செய்திகள் 1-Oct-2016 1:14 PM IST VRC கருத்துக்கள்

‘சதுரங்கவேட்டை’ படத்தை தொடர்ந்து மனோபாலாவின் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘பாம்புச் சட்டை’. பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில தவிரக்க முடியாத காரணங்களால் நின்றுவிட்டது! தற்போது இப்படத்தின் தயாரிப்பு உரிமையை பிரபல விநியோகஸ்தரான ‘சினிமா சிட்டி’ கே.கங்காதரன் வாங்கியுள்ளார். இதனால் ‘பாம்பு சட்டை’யின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கிறது. இது குறித்து கங்காதரன் கூறும்போது,
‘‘நான் பார்த்த பாம்பு சட்டையின் காட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. காலதாமதம் இந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்காது. இப்படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இப்படத்திற்காக தன்னை முழுமையாக அர்பணித்துள்ளார். திரையுலகில் நல்ல அனுபவம் உள்ள மனோபாலா சார் தேர்வு செய்த இந்த கதை வர்த்தக ரீதியாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘பாம்பு சட்டை’யை ‘அபி&அபி’ நிறுவனத்தின் அதிபர் அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து வெளியிட இருக்கிறோம். தயாரிப்பு துறையில் நான் காலடி பதிக்கும் முதல் படம் இது தான்’’ என்றார்.

#PambuSattai #BobbySimha #ManoBala #KeerthiSuresh #CinemaCityKGangatharan #Adams #AbhineshIlangovan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ


;