நடிகர் திலகத்திற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மரியாதை!

இன்று நடிகர் திலகம் சிவாஜி பிறந்த நாள்!

செய்திகள் 1-Oct-2016 12:44 PM IST VRC கருத்துக்கள்

இன்று, (1-10-16) நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 88-ஆவது பிறந்த நாள்! இதனை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜியின் சிலைக்கும், சிவாஜியின் வீடான ‘அன்னை இல்ல’த்திலுள்ள அவரது புகைப்படத்திற்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நடிகர் சங்க துணை தவலைவர் பொன்வண்ணன், டிரெஸ்டி எஸ்.வி.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, பிரகாஷ், உதயா, ஹேமச்சந்திரன், நடிகர் சங்க பொது மேலாளர் பாலாமுருகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சிவாஜியின் பிறஆந்த நாளையொட்டி சிவாஜி குடும்பத்தினர் சார்பில் இன்று மாலை செஅன்னை மியூசிக் அகாடமியில் விழா ஒன்றும் நடைறவிருக்கிறது. இவ்விழாவில சிவாஜி நினைவு விருதுகள் வழங்கப்படவிருக்கிறது.

#ShivajiGanesan #NadigarThilagam #NadigarSangam #Ponvannan #ManoBala #Balamurugan #Prakash #Udhaya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மபிரபு -டீஸர்


;