அரவிந்த்சாமியை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

ரமணா, அரவிந்த்சாமி, மஞ்சு வாரியர் இணையும் படம்!

செய்திகள் 1-Oct-2016 12:20 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் ‘திருமலை’, ‘ஆதி’, தனுஷ் நடிப்பில் ‘சுள்ளான்’ ஆகிய படங்களை இயக்கிய ரமணா ஆடுத்து அரவிந்த்சாமியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ரமணா கடைசியாக இயக்கிய படம் ‘ஆதி’ இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ரமணா மீண்டும் இயக்குனராக களமிறங்கும் இப்படத்தில் மலையாள திரைப்பட உலகின் புகழ்பெற்ற நடிகையான மஞ்சு வாரியரும் நடிக்க இருக்கிறார். கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்ளும் வழக்கமுடைய மஞ்சு வாரியருக்கு ரமணா சொன்ன கதையும், கேரக்டரும் ரொம்பவும் பிடித்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ரமணா, அரவிந்த்சாமி, மஞ்சு வாரியர் இணையும் இப்படத்தின் கூடுதல் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.

#Vijay #Ramana #Thirumalai #Aadhi #Dhanush #Sullan #ArvindSwamy #ThaniOruvan #Bogan #ManjuWarrior

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;