‘இமைக்கா நொடி’களில் அதர்வாவுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை!

அதர்வா, நயன்தாராவுடன் இணையும் தெலுங்கு நடிகை!

செய்திகள் 1-Oct-2016 11:43 AM IST VRC கருத்துக்கள்

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்தில நயன்தாரா மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க, அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கான நடிகையை படக்குழுவினர தேடி வந்தார்கள். இப்போது அந்த நடிகை யார் என்பதை முடிவு செய்து விட்டார்கள். தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும நடிகையான ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத, ஆர்.டி.ராஜ்சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

#ImaikkaNodigal #Atharvaa #RaashiKhanna #Cameofilms #CJ Jayakumar #AjayGnanamuthu #RDRajasekar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;