மலேசியா பயணமாகும் ‘சென்னை-28’ படக்குழுவினர்!

மலேசியாவில் களமிறங்கும் சென்னை-28 படக்குழுவினர்!

செய்திகள் 1-Oct-2016 11:19 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘சென்னைஅ-28 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தை நவம்பர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜயலட்சுமி முதலானோருடன் வைபவ், மஹத், கிருத்திகா, டாக்டர் வித்யா, சனா முதலானோரும் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படம் நவம்பவர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவிருப்பதால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை மலேசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வருகிற 7-ஆம் தேதி மலேசியாவில் நடைறவிருக்கும் இவ்விழாவிற்காக ‘சென்னை-28’ படக்குழுவினர் மலேசியா பயணமாகவுள்ளனர்.

#Chennai600028 #VenkatPrabhu #YuvanShankarRaja #Jai #PremgiAmaran #MirchiShiva #Vaibhav #VijayVasanth #AravindAkash #NithinSathya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;