விஜய் 61-ல் ஏ.ஆர்.ரஹ்மான்?

மீண்டும் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி?

செய்திகள் 30-Sep-2016 12:23 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ‘பைரவா’வின் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வர, அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல்களும் அடுத்து அடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன! சூப்பர் ஹிட்டான ‘தெறி’யை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணையும் விஜய்யின் 61-ஆவது படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தி|ற்கு ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இப்போது விஜய் நடித்து வரும் ‘பைரவா’வுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்நிலையில் மீண்டும் விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் அடுத்த படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பது நிச்சயம். சுந்தர்.சி.இயக்கத்தில் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் பிரம்மாண்ட படமான ‘சங்கமித்ரா’வுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைப்பாளர்.

#Vijay #Vijay61 #Atlee #KajalAggarwal #ARRahman #SriThenandalFilms #SundarC #Sanghamithra #Arya #JayamRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;