பிரபு தேவாவின் ‘தேவி’க்கும் ‘ரெமோ’ ரிசல்ட்!

‘ரெமோ’வை தொடர்ந்து ’தேவி’க்கும் குட் ரிசல்ட்!

செய்திகள் 30-Sep-2016 11:49 AM IST VRC கருத்துக்கள்

வருகிற 7-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படங்களில் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வுக்கு சென்சாரில் ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருக்கிற நிலையில் அதே தினம் வெளியாகவிருக்கும் பிரபுதேவாவின் ‘தேவி’க்கு சென்சாரில் என்ன ரிசல்ட் கிடைக்கும் என்ற எதிரபார்ப்பு இருந்து வந்தது. ஆனால் நேற்று சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்ற ‘தேவி’க்கும் சென்சார் குழு உறுப்பினர்கள் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். படத்தில் எந்த ‘கட்’ஸும் சொல்லவில்லையாம். இதனால் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிற படக்குழுவினர் ‘தேவி’யை மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவும், ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் படம், பிரபு தேவாவும், தமன்னாவும் இணைந்து நடிக்கும் முதல் படம் என பல சிறப்புக்களுடன் வெளியாகவிருக்கும் ‘தேவி’ ரசிகர்களுக்கு ஆயுதபூஜை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட சரியான படமாக இருக்கும் என்கின்றனர்.

#Devi #PrabhuDeva #Tamannaah #RJBalaji #Satish #Remo #SonuSood #Prabhu #Sivakarthikeyan #KeerthySuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;