லாஸ் ஏஞ்சல்ஸ் விழாவில் நடிகை பூஜா தேவாரியாவுக்கு விருது!

பூஜா தேவாரியாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் விருது!

செய்திகள் 29-Sep-2016 4:02 PM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கிய ‘மயக்கம என்ன’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ ஆகிய படங்களில் நடித்த பூஜா தேவாரியா சமீபத்தில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்! இப்படங்களில் பூஜா ஏற்றிருந்த கேரக்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களும் பெற்றிருந்தது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பூஜா! தற்போது பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பூஜா, நாடக மேடையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஆவார்! நாடகம் சினிமா என்று கலை உலகில் பயணித்து வரும் பூஜாவின் திறமையை பாராட்டும் விதமகாக அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின பிரபல ஹாலிவுட் நாடக விழாவான ’ஷார்ட் & ஸ்வீட்’ நாடக விழாவில ‘வளர்ந்து வரும் கலைஞர்’ என்கிற விருது வழங்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய நாடக விழாவாக கருதப்படும இந்த விழாவில் பூஜா தேவாரியாவுடன் மதிவாணன் ராஜேந்திரனும் விருது பெற்றுள்ளார். அத்துடன் இந்த விழாவில் ‘மை நேம் ஈஸ் சினிமா’ மற்றும் ‘வா வன் கோ’ ஆகிய இரண்டு நாடகங்களையும் பூஜா தேவாரியா மற்றும் மதிவாணன் இணைந்து அரங்கேற்றி பாராட்டு பெற்றிருக்கிறார்கள்.

#PoojaDevariya #Iraivi #AandavanKattalai #MayakkamEnna #KutrameThandanai #VallavanukkuVallavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;