முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படமான தமிழ் படம்!

புதுமுகங்கள் நடிக்கும் ‘நுண்ணுணர்வு’

செய்திகள் 29-Sep-2016 1:12 PM IST VRC கருத்துக்கள்

மதிவாணன் சக்திவேல் நடித்து, இயக்கும் படம ’நுண்ணுணர்வு’. இவருடன் வேறு சில புதுமுகங்களும் நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாகியுள்ளது. இயக்குனர் மதிவாணன் சக்திவேலிடம் படத்திற்கு வித்தியாசமாக ‘நுண்ணுணர்வு’ என்று டைட்டில் வைத்திருக்கிறீர்களே?’ என்று கேட்டபோது,

‘‘இந்த தலைப்பின் அர்த்தம் என்ன என்பது படம் பார்த்தால் தெரிந்து விடும். அதிகமாக பழக்கத்தில் இல்லாத ஒரு தமிழ் பெயரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்து வைத்த டைட்டில் தான இது! அதில் பெருமை அடைகிறேன். கடித காதல், டெலிஃபோன் காதல், இன்டர்நெட் காதல் என்ற வகையில் வித்தியாசமான காதல், திகில் நிறைந்த படம் ‘நுண்ணுணர்வு’. இப்படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிரபல எடிட்டர் சுரேஷ் அர்ஸ் கவனித்துள்ளார். இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறேன்’’ என்றார்.

#MathivaananSakthivel #Nunnunarvu #SureshUrs

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;