செல்வராகவன் இயக்கத்தில் விஜய்?

விஜய்யை இயக்குகிறாரா செல்வராகவன்?

செய்திகள் 29-Sep-2016 12:40 PM IST VRC கருத்துக்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’வின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்! அட்லியும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணையும் விஜய்யின் 61ஆவது படமான இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ முரளி ராமசாமி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜய்யின் ’பைரவா’வின் படப்பிடிப்பு முடிந்ததும் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்காக இயக்குனர் செல்வராகவன் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கிறார் என்றும் இந்த ஸ்கிரிப்ட்டில் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் இரண்டு நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது சம்பந்தமான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Selvaraghavan #NenjamMarapadhillai #Santhanam #ReginaCassandra #Vijay #Bhairava #Atlee #Bharathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;