பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘M.S. Dhoni: The Untold Story’. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இப்படத்தில் தோணி பாத்திரத்தில் சுஷாந்த் சிங் ரஜ்புத் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. பொதுவாக பெரும்பாலான ஹிந்தி திரைப்படங்களும் இங்கு ரிலீசாகு அதே நாளிலேயே பாகிஸ்தானிலும வெளியாவது வழக்கம். பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ஹிந்தி திரைப்படங்களுக்கு பாகிஸ்தானிலும் ஓரளவுக்கு மார்க்கெட் இருந்து வருகிறது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்படுள்ள பதற்றமான சூழிநிலை காரணமாகவும், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு பிரபல அரசில் கடசி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் உடனே இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த்தை முன்னிட்டும் ‘தோணி’ திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட போவதில்லை என்று பாகிஸ்தானில் உள்ள I.M.G.C.GLOBEL ENTERTAINMENT நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரையில் வெளிநாட்டு படங்களின் விநியோகத்தில் பெரும் பங்கு வகித்து வரும் நிறுவனமாம் இது. இந்த அறிவிப்பு ஹிந்தி திரைப்பட உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
#MSDhoniTheUntoldStory #NeerajPandey #AmaalMallik #RochakKohli #SushantSinghRajput #AnupamKher
ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி.இயக்கும்...
இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு...
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘M.S.DHONI UNTOLD STORY’ திரைப்படம் தமிழகமெங்கும் 7 கோடி ரூபாய் வசூல்...