பார்த்திபனுடன் இணையும் பார்வதி நாயர்!

அருண்விஜய்யை தொடர்ந்து பார்த்திபனுடன் இணையும் பார்வதி நாயர்!

செய்திகள் 29-Sep-2016 10:56 AM IST VRC கருத்துக்கள்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்த பார்வதி நாயர், கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘உத்தம வில்லன்’ படத்திலும் நடித்திருந்தார். இப்படங்களை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, தயாரித்து நடிக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் பார்வதி நாயார்! மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட பார்வதி நாயர் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் மலையாள பெண்ணாகவே நடிக்கிறார். கடந்த ஜூலை மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது. ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் பலரது முதலீட்டுடன் பார்த்திபன் தயாரிக்கும் இப்படத்திற்கு சத்யா இசை அமைக்கிறார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் படம் இது.

#ParvathiNair #Parthipan #KoditaIdangalaiNirappuga #Sathya #YennaiArindhaal #Ajith #ArunVijay #Victor

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;